Answer: உள்ளத் துள்ளது கவிதை – இன்பம் உருவெ டுப்பது கவிதை; தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை தெரிந்து ரைப்பது கவிதை. இலக்கிய பஞ்சகம் 114 வள்ளுவர் தந்த திருமைறையைத் – தமிழ் மாதின் இனிய உயிர் நிலையை உள்ளம் தெளிவுறப் போற்றுவமே – என்றும் உத்தம ராகி ஒழுகுவமே. பாவின் சுவைக்கடல் உண்டெழுந்து – கம்பன் பாரிற் பொழிந்ததீம் பாற்கடலை நாவின் இனிக்கப் பருகுவமே – நூலின் நன்னயம் முற்றுந் தெளிகுவமே, 116 தேனிலே ஊறிய செந்தமிழின் – சுவை தேரும் சிலப்பதி காரமதை ஊனிலே எம்முயிர் உள்ளளவும் – நிதம் ஓதி யுணர்ந்தின் புறுவோமே. கற்றவர் மெச்சும் கலித்தொகையாம் – இன்பக் கற்பனை சேருங் களஞ்சியத்தை முற்ற அளந்து தெரிவோமே – காதல் மூழ்கும் துறைகண்டு வாழ்வோமே. பண்டை இயற்கை வளங்களெல்லாம் – பத்துப் பாட்டின் வளத்தினிற் கண்டறிந்து, மண்டல மெங்கும் கமழும் அருந்தமிழ் வாசம் நுகர்ந்து மகிழ்வோமே. Reply
Answer:
உள்ளத் துள்ளது கவிதை – இன்பம்
உருவெ டுப்பது கவிதை;
தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை
தெரிந்து ரைப்பது கவிதை.
இலக்கிய பஞ்சகம்
114 வள்ளுவர் தந்த திருமைறையைத் – தமிழ்
மாதின் இனிய உயிர் நிலையை
உள்ளம் தெளிவுறப் போற்றுவமே – என்றும்
உத்தம ராகி ஒழுகுவமே.
பாவின் சுவைக்கடல் உண்டெழுந்து – கம்பன்
பாரிற் பொழிந்ததீம் பாற்கடலை
நாவின் இனிக்கப் பருகுவமே – நூலின்
நன்னயம் முற்றுந் தெளிகுவமே,
116 தேனிலே ஊறிய செந்தமிழின் – சுவை
தேரும் சிலப்பதி காரமதை
ஊனிலே எம்முயிர் உள்ளளவும் – நிதம்
ஓதி யுணர்ந்தின் புறுவோமே.
கற்றவர் மெச்சும் கலித்தொகையாம் – இன்பக்
கற்பனை சேருங் களஞ்சியத்தை
முற்ற அளந்து தெரிவோமே – காதல்
மூழ்கும் துறைகண்டு வாழ்வோமே.
பண்டை இயற்கை வளங்களெல்லாம் – பத்துப்
பாட்டின் வளத்தினிற் கண்டறிந்து,
மண்டல மெங்கும் கமழும் அருந்தமிழ்
வாசம் நுகர்ந்து மகிழ்வோமே.